லோக்சபா தேர்தலை (Lok sabha election) முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகையை உயர்த்த ஆளும் திமுகதிட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான 15-9-2023 அன்றுகாஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 1.7 கோடி மகளிர், மாதந்தோறும் ரூ.1000/- பெற்று பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கானதொகை ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கபட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தலுக்கான வாக்குறுதிகளை உருவாக்க ஆளும் திமுக திட்டமிட்டுவருகிறது.
அதன்படி லோக்சபா தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகையை உயர்த்த ஆளும் திமுக திட்டமிட்டுள்ளதாகதகவல்கள் வருகின்றன.
அதாவது ரூ. 1000க்கு பதிலாக ரூ.1500 கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுக்க ஆளும் திமுகதிட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு (Lok sabha election) திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே மண்டலபொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். அதேபோல் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடன் உடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தைசெய்ய குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்றதேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கை தயாரிப்பு’ குழு.
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம்தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதே போல் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தைசெய்ய டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கபட்டுள்ளது.
இந்த குழுவில் கே.என்.நேரு இ.பெரியசாமி , ஆ.ராசா எம்.பி., எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கைதயாரிப்பு’ குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தலுக்கான வாக்குறுதிகளை உருவாக்க ஆளும் திமுக திட்டமிட்டுவருகிறது.
+ There are no comments
Add yours