தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையன்று தொடங்கி, பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது.
ஜல்லிக்கட்டை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்க ஏதுவாக, அலங்காநல்லூர் அருகே கீழக் கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமத்தில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை நடத்துவதற்காக கலாச்சாரம் மையம் ரூ.44.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது
பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்திடும் வகையில் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன..
10 ஆயிரம் பேர் ஜல்லிக்கட்டை பார்த்து ரசிக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது
இரண்டு கட்டங்களாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் கட்டாயம் அலங்காநல்லூரில் நடத்தப்படும்
+ There are no comments
Add yours