காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை தர வேண்டும் என பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஒரு நாள் மறியல்போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்களதுகோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் சாலை மறியலில் ஈடுப்பட்ட 500-க்கும்மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய போராட்ட குழுவினர், CPS திட்டத்தை ரத்து செய்யவேண்டும்,ஊதிய முரண்பாட்டை களைதல் வேண்டும்,காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலம் முறைஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகின்ற பிப்ரவரி 15-ம் தேதிதமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகதெரிவித்தனர்.
அதற்கும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகின்ற பிப்ரவரி 26-ம் தேதி முதல் தொடர்போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் திரண்டு மறியலில் ஈடுப்பட்டதால் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
+ There are no comments
Add yours