முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நினைவு நாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைவர்கள் பலரும் எம்.ஜி.ஆருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நினைவு நாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அதிமுக முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் வீரிய விருட்சத்தின் விலை மதிக்க முடியாத விதை, தமிழகத்தில் இல்லையென்ற சொல்லை இல்லாமல் ஆக்கிட அயராது பாடுபட்ட பாரத ரத்னா, ஏழை எளிய மக்களின் வலிகள் அறிந்து வளர்ச்சி திட்டங்கள் வகுத்த தன்னலமற்ற தனித்தலைவர், சத்துணவு தந்திட்ட சரித்திர நாயகர், என்றும் கோடிக்கணக்கான தமிழக மக்கள் நெஞ்சங்களில் வாழும் #மன்னாதிமன்னன்_MGR , புரட்சித்தலைவர் வகுத்து தந்த பாதையின் வழிநடந்து, அவரின் நினைவு நாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours