வாங்கல் ரயில் நிலையம் நாளை முதல் மூடல் – ரயில்வே துறை அறிவிப்பு!

Spread the love

தமிழகத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் நாளை முதல் மூடப்படுவதாக ரயில்வே துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரயில்வே உலகிலேயே மிக நீளமான ரயில்வே பாதைகள் கொண்டதும், மிக அதிக அளவிலான பயணிகளை ஏற்று செல்லும் பொதுப் போக்குவரத்தாகவும் இருந்து வருகிறது. ரயில்வே துறை சார்பில் ரயில்கள் நின்று செல்லும் வகையில் அவ்வப்போது புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம் பயணிகள் இடையே போதுமான வரவேற்பு இல்லாத ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களும் அவ்வப்போது மூடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் ரயில் நிலையம் ஒன்றை மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள கரூர்-சேலம் வழித்தடத்தில் வாங்கல் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. நாளை முதல் இந்த ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் மோனூர்-கரூர் வழித்தடத்தில் வாங்கல் ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது என்றும், இன்று மட்டுமே கடைசியாக ரயில்கள் இந்த வழித்தடத்தில் நின்று செல்லும் எனவும் ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளுக்கு வாங்கல் ரயில் நிலையத்திலிருந்து பயணச் சீட்டுகள் வழங்கப்படாது எனவும், பிற ரயில் நிலையங்களில் இருந்து வாங்கல் ரயில் நிலையத்துக்கும் பயணச்சீட்டு வழங்கப்படாது எனவும் சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours