விரைவில் உதயமாகும் 7 மாவட்டங்கள்…!

Spread the love

தமிழ் நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் இருக்கும் நிலையில், கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி,ஆரணி, விருத்தாச்சலம், கோபிச்செட்டிபாளையம் ஆகியவை 7 புதிய மாவட்டங்களாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில், நிர்வாகக் காரணங்களுக்காகவும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்கனவே இருக்கும் 38 மாவங்களுடன் மேலும் ஏழு புதிய மாவட்டங்கள் உதயமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், இந்த புதிய மாவட்டங்களைப் பிரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டில் தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்துவந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம்,

வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டம், என 5 மாவட்டங்கள் புதிதாக உதயமாகியது.

இதனை, அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார்.

இந்த ஐந்து மாவட்டங்கள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிக்கப்பட்டன. ஐந்து புதிய மாவட்டங்களுக்கும் அதே ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதன் பிறகு, தமிழகத்தில் 37 மாவட்டங்கள் இருந்துவந்த நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் நிர்வாக வசதிக்காக,

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கடைசியாக நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் 38வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

அதன் பிறகும், பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தனி மாவட்டம் வேண்டும் எனக் கோரி தமிழக அரசிடம் மனுக்கள் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் இருக்கும் நிலையில், 7 புதிய மாவட்டங்கள் உதயமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம், கோபிச்செட்டிபாளையம் ஆகியவை 7 புதிய மாவட்டங்களாக உதயமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours