அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியுள்ளது. டெல்டாவின் ஒருபகுதியாக அறியப்படும் அரியலூரில் மாவட்டத்தில் உள்ள காட்டகரம், குறுங்குடி, குண்டவெளி, முத்துசேவடமத்தில் உள்ளிட்ட கிராமப்பகுதிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் கிணறுகள் அமைப்பது தொடர்பாக அப்பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதில் பெறப்படும் தகவல்களை அளிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், காவிரி ஆற்றில் இருந்து கிணறு அமைவிடங்களின் தூரம் குறித்த விவரங்களை தெரிவிக்கவும் ஓ.என்.ஜி.சி-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
+ There are no comments
Add yours