அதி கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங் களில் 3,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்று தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். அதி கனமழையால் பாதிப்புக் குள்ளான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பிற மாவட்டங் களில் இருந்தும், தேசிய அளவில் இருந்தும் மீட்புப் படையினர் விரைந்து நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க 190 சிறப்பு மருத்துவக் குழுக்களை பொது சுகாதாரத் துறை அனுப்பியது. பொது சுகாதாரத் துறை இயக்குநர், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் என உயரதிகாரிகள் அனைவரும் அங்கு நேரில் சென்று மருத்துவக் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தற்போது நான்கு மாவட்டங் களிலும் வெள்ளம் வடிந்துவிட்டது. மழை நீர் தேங்கிய பகுதிகளில் எலிக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காமாலை, காலரா, சேற்றுப்புண், டெங்கு, சிக்குன் குனியா போன்றநோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளது.
இதைத் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 4 மாவட்டங்களில் 3,500 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 1.5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. அவர்களில் தொற்று பாதிப்புக்குள்ளான 1,500 பேருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.. இவ்வாறு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறினார்.
டெங்கு அதிகரிப்பு: தமிழகத்தில் நடப்பாண்டில் 8,400-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 10 பேர் உயிரி ழந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை மற்றும் பருவநிலை மாற்றம் காரணத்தால் டெங்குபரவல் அதிகரிக்க வாய்ப்புள்ள தாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனை உறுதிப்படுத்தும்வகையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தேங்கும் மழைநீரில் டெங்குவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதனால், தமிழகம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours