வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என வீடியோ வெளியிட்டு நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அரசியல் தலைவர்கள் , திரை பிரபலங்கள் , மக்கள் என அனைவரும் அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
அந்த வகையில் , சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்கு சாவடி மையத்திற்கு நடிகர் சூரி தனது மனைவியுடன் வாக்களிக்க சென்றார் . அப்போது வாக்களாலர் பட்டியலில் சூரியின் பெயர் இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிகழ்வு குறித்து நடிகர் சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,என் ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்தேன். கடந்த எல்லா தேர்தல்லயும் என்னுடைய உரிமையை கரெக்டா செஞ்சிருக்கேன். ஆனா, இந்த தடவை இந்த பூத்துலஎன்னோட பேரு விடுபட்டு போச்சின்னு சொல்றாங்க. மனைவி ஓட்டு மட்டும் இருக்கு.
இருந்தாலும் 100 சதவீதம் ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கலன்னும் போது ரொம்ப வேதனையா இருக்கு, மனசு கஷ்டமா இருக்கு. எங்க யாருடைய தவறு, எப்படி நடந்ததுன்னு தெரியலை. இருந்தாலும் ஓட்டு போட்டுட்டு, ஓட்டு போடுங்கன்னு சொல்றத விட, ஓட்டு போட முடியலையேன்ற வேதனையோட நான் சொல்றேன்.
எல்லாரும் தயவு செஞ்சு 100சதவீதம் ஓட்டு போடுங்க. ரொம்ப முக்கியம், நாட்டுக்கு நல்லது. எல்லாரும் தவறாம உங்க வாக்கை செலுத்துங்க. நானும் அடுத்த தேர்தல்ல கண்டிப்பா என் வாக்கை செலுத்துவன்னு நம்பறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகர் சூரி மற்றும் அவரது மனைவி இருவரும் ஒன்றாக வாக்களிக்க வந்த நிலையில், மனைவி மட்டும் வாக்களித்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பினார் .
தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours