ராமநாதபுரம் மாவட்டத்தில் 100% சிசு மரணம் இல்லை… அமைச்சர் மா. சுப்பிரமணியன் !

Spread the love

ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் சிசு இறப்பு இல்லை என்றும் பிரசவ கால இறப்புகளும் குறைந்த சதவீத அளவில் உள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் ரூ,354 கோடி மதிப்பீட்டில் 6தளங்கள்,500 படுக்கை வசதிகள் 10 அறுவைசிகிச்சை அரங்கங்கள் அடங்கிய புதியகட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் திறந்து வைத்து மருத்துவ சேவைகளை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து சுகாதார துறை அமைச்சர் பேசுகையில், “ராமநாதபுரத்தில் புதிய மருத்துவ கட்டிடங்கள் வந்ததுள்ள நிலையில் சிசு இறப்பு100% இல்லை என்றும் பிரவத்தின் போது கர்ப்பிணிகள் இறப்பு குறைந்த சதவீமதாக உள்ளது என்பதே பெருமை தர கூடிய ஒன்றாக அமையும் எனவும் கூறினார்.

மேலும் எந்த விபத்திலும் உயிர் காக்கும் வகையில் இந்த மருத்துவமனை அமைய வேண்டும் அப்போதுதான் இவ்வளவு பெரிய கட்டமைப்புகள் அமைத்ததற்கு பெருமை சேர்க்கப்படும் எந்த விதமான நோய்கள் தொற்றுநோய் அல்லது தொற்றாத நோய்கள் என எந்த நோய்கள் வந்தாலும் இயற்கை மரணங்களைத் தவிர மரணம் இல்லை என்பதை இந்த மாவட்டம் மருத்துவமனை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

” ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து 21 மருத்துவர்கள் ஆறு மாத காலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது; வெளி மாநில மருத்துவர்களுக்கும் மருத்துவ பயிற்சிஅளிக்கும் வகையில் நமது மருத்துவ சேவை உயர்ந்துள்ளது”, என பெருமிதம் கொண்டார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் மருத்துவமனைகளுக்கான தர சான்றுகள் 239 மருத்துவ மனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த 10 ஆண்டுகளாக மொத்தம் 239 சான்றுகள் மட்டுமே பெற்று சாதனை படைத்துள்ளது தமிழக மருத்துவ துறை.

ராமநாதபுரம் மாவட்டம் என்பது வறண்ட மாவட்டமாக இருந்தது; தற்போது வளர்ச்சியடைந்து வரும் மாவட்டமாக உள்ளது. விரைவில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாறும்”, என்றார்.

முன்னதாக விழாவிற்கு வந்த அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்திக்க 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வந்தார். அவரை உள்ளே அனுமதிக்காமல் மருத்துவமனை பணியாளர்கள் தடுத்ததால் மருத்துவமனை வளாகத்தில் அழுதபடியே தரையில் அமர்ந்தார்.

கொளுத்தும் வெயிலில் தரையில் அமர்ந்த பெண்ணை மருத்துவ பணியாளர்கள் குண்டுக்கட்டாக எழுப்ப முயற்சித்தனர். அதற்கு இணங்காமல் ஊழியர்களிடம் வாக்கு வாத்ததில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

தொடர்ந்து அவர் வளாகத்தில் தரையில் அமர்ந்து அழுதபடியே இருந்தார். தகவல் அறிந்த அங்கிருந்த பெண் காவலர் பெண்ணிடம் விசாரணை நடத்தி அமைச்சரை சந்திக்க வைப்பதாக கூறி. வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அமைச்சர்ரை சந்தித்து தன் குறைகளை சொல்ல வந்த பெண்ணை மருத்துவமனை பணியாளர்கள் உள்ளே அனுமதிக்க விடாமல் தடுத்தது குறித்து வினவியதற்கு அவர் ஒரு மனநோயாளி என்றும் தெரிவித்தனர்.

ஆனால் காவலர் நடத்திய விசாரணையில் தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் தன்னை பணியாளர்கள் உள்ளே விடாமல் தடுத்ததையும் தெளிவாக கூறியது குறிப்பிடத்தக்கது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது, ஏழையின் சொல் எடுபடாது என்ற சொல்லுக்கேற்ப இச்சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours