1,000-வது குடமுழுக்கு விழா… நெகிழ்ந்த முதல்வர்!!

Spread the love

சென்னை,மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் 1,000-வது குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்கு நடத்துதல், திருக்குளங்கள். திருத்தேர்கள் மற்றும் நந்தவனங்களை சீரமைத்தல்பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் உள்ளிட்ட பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, குடமுழுக்குகள் நடைபெறாததிருக்கோயில்களை கண்டறிந்து திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத் துறைக்கு தமிழக அரசு உதவிட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து சென்னை, மேற்கு மாம்பலம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் 1,000 – வது குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சமய சான்றோர்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“எல்லார்க்கும் எல்லாம்” என்ற DravidianModel ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்துசமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன.

மேலும் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு.இன்றைய நாள்,1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours