தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபி வன்னிய பெருமாள், ஊர்காவல் படை டிஜிபியாக பணியிட மாற்றம்.
சென்னை காவல் பயிற்சி கல்லூரி ஐஜி தமிழ்சந்திரன் ஐபிஎஸ் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய செயலாளராக நியமனம்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய செயலாளராக இருந்த பி.கே.செந்தில்குமாரி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த மகேஸ்வரி ஐபிஎஸ், திருநல்வேலி காவல் ஆணையராக நியமனம்.
சிவில் சப்ளை சிஐடி பிரிவு ஐஜியாக ஜோஷி நிர்மல்குமார் ஐபிஎஸ் நியமனம்.
காத்திருப்பு பட்டியலில் இருந்த தீஷா மிட்டல் ஐபிஎஸ், சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவுக்கு டிஐஜியாக நியமனம்
சென்னை வடக்கு, சட்டம் – ஒழுங்கு காவல் இணை ஆணையராக அபிஷேக் தீட்சித் நியமனம்
பி.சாமூண்டீஸ்வரி, சென்னை டிஜிபி காவல்துறை தலைமையகத்தின் டிஐஜியாக நியமனம்
திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த டி.பி.சுரேஷ்குமார், தென்காசி மாவட்ட எஸ்.பியாக நியமனம்
தென்காசி மாவட்ட எஸ்.பியாக இருந்த இ.டி.சாம்சன் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சிஐடியாக நியமனம்
திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம்
இ.சுந்தரவதனம்,கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக நியமனம்
டி.என்.ஹரி கிரண் பிரசாத், கடலோர பாதுகாப்பு படை எஸ்.பியாக நியமனம்(ராமநாதபுரம்)
பி.சுந்தரவடிவேல் நீலகிரி மாவட்டம் எஸ்.பியாக நியமனம்
சென்னை டிஜிபி தலைமையக எஸ்.பியாக தீபா சத்யன் நியமனம்
+ There are no comments
Add yours