2வது நாளாக  மாமல்லபுரத்தில் மாணவர்களை தேடும் பணி தீவிரம்!

Spread the love

மாமல்லபுரம் கடற்பகுதியில் மாயமான ஆந்திர மாணவர்கள் 4 பேரை இரண்டாம் நாளாக தீயணைப்புப் படையினர்இன்று தேடி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம்அனந்த்பூர் மற்றும் சித்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 46 பேர் பேருந்து மூலம்மாமல்லபுரத்துக்கு நேற்று சுற்றுலா வந்தனர்அவர்கள் அங்கு சுற்றுலா இடங்களைப் பார்த்துவிட்டுகடலில்குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கல்லூரி மாணவர்களில் 10 பேர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்அப்பகுதிமீனவர்கள் விரைந்து செயல்பட்டு 6 பேரை மீட்டனர்கரைக்குக் கொண்டுவரப்பட்ட சில நிமிடங்களில் விஜய் (18), என்ற மாணவர் உயிரிழந்தார்எஞ்சிய 4 பேர் மாயமாகினர்போலீஸார்மீனவர்கள்ஸ்கூபா டைவிங் பிரிவினர் எனமீட்பு குழுவினர் மாயமான மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்நேற்று இரவு வரை அவர்கள்மீட்கப்படவில்லை.

மாயமான மாணவர்களைத் தேடும் பணி

இந்நிலையில்இன்று இரண்டாவது நாளாகமாயமான கல்லூரி மாணவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறதுமாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு 24 மணி நேரத்தை கடந்துவிட்டதால் அவர்கள்உயிரோடு மீட்கப்படுவது சாத்தியமில்லை என அச்சம் எழுந்துள்ளதுஇருப்பினும் மாணவர்களைத் தேடும் பணிதொடர்ந்து நடைபெற்று வருகிறத மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மாமல்லபுரத்துக்குவருகைதந்துள்ள சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours