தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.467 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.
பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை கலைக்கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்துள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.467 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.
அந்த வகையில், நவம்பர் 11 ஆம் தேதி 220.85 கோடியும், நவம்பர் 12 ஆம் தேதி 246.78 கோடி விற்பனையாகியுள்ளது. நவ.11ம் தேதி மதுரையில் ரூ.52.73 கோடி, சென்னையில், ரூ.48.12 கோடி, கோவையில் ரூ.40.20 கோடி, திருச்சியில் ரூ.40.02 கோடி, சேலத்தில் ரூ.39.78 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், நவ.12ல் திருச்சியில் ரூ.55.60 கோடி, சென்னையில் ரூ.52.98 கோடி, மதுரையில் ரூ.511.97 கோடி, சேலத்தில் ரூ.46.62 கோடி, கோவையில் ரூ.39.61 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு 2022 ஆம் ஆண்டு ரூ. 464.21 கோடிக்கு விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு, டாஸ்மாக் கடைகளில் ரூ.467 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours