திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அம்மையநாயக்கனூர் பகுதியில் விவசாயிகளிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கி, 13 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கொடைரோடு பகுதிகளில் விவசாயிகள் நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் தனிப்படை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், தோட்டத்தில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த சிறுமலை அகஸ்தியர்புரம் பகுதியை சேர்ந்த முருகன்(40) மற்றும் பாலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜான்சாமுவேல்(62) ஆகியோரிடம் இருந்து உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கி மற்றும் 13 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். மேலும், 2 பேரையும் கைது செய்து அம்மையநாயக்கனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours