திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். இதுதொடர்பாக அப்போதே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெரி சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்யவில்லை. இந்த சமயத்தில், அண்மையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் நடிகை விஜய லட்சுமி மீண்டும் பாலியல் புகார் அளித்திருந்தார்.
அதில், கடந்த 2008ம் ஆண்டு சீமான் மதுரையில் தன்னை திருமணம் செய்து கொண்டார். 2011-இல் பணம், நகைகளை பறித்துக் கொண்டு மோசடி செய்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் 7 முறை சீமான் தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் என பல்வேறு புகார்களை விஜயலட்சுமி கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், விஜய லட்சுமி புகார்களை சீமான் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தல் நெருங்கி வருவதால், தன்னை தேர்தல் பணியில் இருந்து திசை திருப்பவே இந்த புகார்கள் வைக்கப்படுகிறது என குற்றசாட்டினார். இதனிடையே, புகார் தொடர்பாக விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில், நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தினர்.
மேலும், நடிகை விஜய லட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், விசாரணக்கு ஆஜராகாத சீமான், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறும் தனது வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார். இன்று இரண்டாவது முறையாக சீமானுக்கு சம்மன் அளிக்க போலீசார் அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர்.
ஆனால், அதனை வாங்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனிடையே, சீமானுக்கு தைரியம் இருந்தால் சம்மன வாங்க வேண்டியதுதான என தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி எச்சரிக்கும் விடுத்திருந்தார். இந்த நிலையில், காவல்துறை முன் நான் ஆஜராகும்போது என் மீது புகாரளித்த நடிகை விஜய லட்சுமியும் ஆஜராக வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஒரே நாளில், ஒரே சமயத்தில் நான், விஜய லட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோரை வைத்து விசாரணை நடத்த வேண்டும். ஒரே நேரத்தில் மூவரையும் விசாரணை செய்து குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிய வேண்டும் என விஜய லட்சுமி புகாரில் தனக்கு அளிக்கப்பட்ட சம்மனை அடுத்து, காவல்துறைக்கு சீமான் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், என் மேல் குற்றச்சாட்டு வைக்கும் விஜய லட்சுமி, வீரலட்சுமி இருவரும் என் முன் நிற்க வேண்டும் என்றுள்ளார்.
மேலும், கட்சி நிகழ்வுகள், மக்கள் பிரச்சனை இருப்பதால் ஒவ்வொரு மணிநேரமும் எனக்கு முக்கியானது. விஜய லட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகிய இருவரின் குற்றசாட்டிலும் உண்மையும் அடிப்படையும் இல்லை. நான் விசாரணைக்கு வரும்போது எனக்கு எதிராக காணொளிகளை வெளியிட்டு அவதூறு பரப்புகிறார்கள் . பொதுவெளியில் என்ன பற்றி பேசி என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வேலையை செய்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours