தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி செங்கல்பட்டில் முதல் வருகையை முன்னிட்டு, இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்ட அவர், மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து மறைமலைநகர் அருகே ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று செங்கல்பட்டில் மறைமலைநகரில், களஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.
+ There are no comments
Add yours