விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்படும். அவ்வாறு பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சில குறிப்பிட்ட நாட்களில் நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
அப்படி கரைக்கப்படும்போது பல அசாம்பாவிதங்கள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைக்கும் போது நான்கு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தாதியா மாவட்டத்தில் உள்ள நிராவல் பிடானியா கிராமத்தில் விநாயகர் திருவிழா நடந்து வரும் நிலையில், அங்கே நிறுவப்பட்ட விநாயகர் சிலையைக் கரைப்பதற்காக குழந்தைகள் குளத்தில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஏழு குழந்தைகள் குளத்தில் மூழ்குவதைக் கண்ட கிராம மக்கள் 3 பேரை காப்பற்றியுள்ளனர்.
ஆனால், துரதிஷ்டவசமாக நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட மூன்று குழந்தைகளில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அதனால் அவர்கள் சிகிச்சைக்காக குவாலியரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours