நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளிக்கு வந்த 40 கோடி ஜிஎஸ்டி பில் .. திருப்பத்தூரில் வினோதம் !

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே நூறு நாள் வேலைக்கு செல்லும் பெண் கூலி தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கட்ட கோரி நோட்டீஸ் வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மலர். இவர் நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு விழுப்புரம் வணிக வரி துணை ஆணையர் அலுவலகத்திலிருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது.

அதில் தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டப் படி இந்த ஆண்டுக்கான வரி மற்றும் கடந்த 3 ஆண்டுகளுக்கான அபராதம் என மொத்தம் 40 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த மலர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து மலர், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதைத் தொடர்ந்து வெளியில் வந்து செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கூலி தொழிலாளி மலர் பேட்டியளித்தார்.

அப்போது, “என் பெயரில் ரூ.40 கோடி ஜிஎஸ்டி செலுத்த நோட்டீஸ் வந்துள்ளது. எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் கூலி வேலைக்கு சென்று தான் வாழ்க்கை நடத்தி வருகிறேன்.

எனவே, இந்த பிரச்சினையிலிருந்து நான் மீள்வதற்கு அரசு எனக்கு உதவ வேண்டும். ஆதார் கார்டு, பான் கார்டை வைத்து என்னை பிளாக்மெயில் செய்துள்ளனர்” என்று கூலி தொழிலாளி மலர் கூறினார்.

நூறு நாள் வேலைக்கு செல்லும் பெண் கூலி தொழிலாளிக்கு ரூ.40 கோடி ஜிஎஸ்டி கோரி நோட்டீஸ் வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours