ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட உள்நாட்டு முன் மாதிரி வேக ஈனுலையின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
கல்பாக்கத்தில் 500 மெகாவாட் வேக ஈனுலை மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைப்பது, சென்னையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது ஆகிய நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று மாலை 3.45 மணியளவில் சென்னை வந்தார்.
பின்னர் அங்கிருந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு இந்திய விமானப்படையின் ‘எம்ஐ-17வி5’ ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார். பிரதமருடன் மேலும் இரு ஹெலிகாப்டர்கள் உடன் சென்றன.
கல்பாக்கத்தில் பாரதிய நபிகியாவித் யுத் நிகம் லிமிடெட் நிறுவனம் உருவாக்கியுள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட உள்நாட்டு முன் மாதிரி வேக ஈனுலையின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கல்பாக்கம் பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 7 நாள்களில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் வருகையை முன்னிட்டு, கல்பாக்கம் மற்றும் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours