600 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Spread the love

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு விழா மற்றும் கட்சி நிகழ்வில் பங்கேற்க உள்ளார் . முதற்கட்டமாக ஏற்கனவே அறிவித்தது போல, திருவண்ணாமலையில் புதிய பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு பயன் பெரும் வகையில், அருணை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 600 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் அந்த வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞர் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் மலைப்பாம்பாடி கிராமத்தில், வடக்கு மண்டல திமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளும், வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் நிலவரம், அதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் பற்றி கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

இதற்கு முன்னதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிகளும் நாடளுமன்ற தேர்தல் குறித்தும், திமுகவின் நகர்வுகள் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் அண்மையில் நடந்த ஒரு ஆலோசனை கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் திமுக வேட்பாளர் தோற்கிறார்களோ, அந்த தொகுதியில் மாவட்ட செயலாளர்கள் பதவி பறிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours