7,108 கோடி ரூபாய் முதலீடு.. 22,000 வேலைவாய்ப்புகள்… தமிழக அமைச்சரவையில் முக்கிய முடிவுகள்.!

Spread the love

நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அப்போது சென்னையில் நடைபெற உள்ள தொழில்துறை மாநாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசினார்.

அவர் கூறுகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி வளர்ச்சியானது உயர்ந்துள்ளது. அடுத்ததாக 8 புதிய நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே தொடங்கப்பட்டு தற்போது விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ள நிறுவனங்கள் ஆகியவைகளுக்கு அமைப்பு முறையில் தொகுப்பு சலுகைகள் அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி , ராணிப்பேட்டை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 7018 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் வர உள்ளன. இதன் மூலம் 22,536 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகப்படும் என தெரிவித்தார்.

அதேபோல், தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை 2023க்கும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். அதன்படி, தமிழகத்தில் 1076 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை உள்ளது. அதில் 4 பெரிய துறைமுகங்கள், 17 சிறிய துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன. நமது கடலோர வர்த்தகத்தை மேம்படுத்த சிறிய துறைமுக கட்டமைப்பு மிக அவசியம். இதனை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு மாநில துறைமுகம் மேம்பாட்டு கொள்கை 2023 வடிவமைக்கப்பட்டது.

கடந்த 16 ஆண்டுகளாக கடல் சார்வணிகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு பல்வேறு மாநிலங்களுக்கு இடையே பெரிய போட்டி நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு தனியார் முதலீட்டை ஈர்க்கவும் துறைமுக மேம்பாட்டு கொள்கை உருவாக்கப்படுவது அவசியமான ஒன்றாக உள்ளது. மகாராஷ்டிரா, ஓடிஸா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள துறைமுக நடைமுறை கொள்கைகளை ஆய்வு செய்த பின்னர் நமது தமிழ்நாடு மாநில துறைமுகம் மேம்பாட்டு கொள்கை 2023-ஐ உருவாக்கி உள்ளோம் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours