டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி உயிரிழந்தார்.
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே அரசு தடுப்பு நடவடிக்கைகளையும் வேகமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த நான்கு வயது சிறுமி டெங்கு பாதிப்பால் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அபிநிதி என்ற சிறுமி கடந்த நான்கு நாட்களாக டெங்கு பாதிப்பு காரணமாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிர் இழந்தது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள், டெங்கு பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
+ There are no comments
Add yours