சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பாரப்பட்டி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இங்குள்ள கடைகளுக்கு தினமும் புதிய பட்டாசுகள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் இன்று மாலை அங்குள்ள ஒரு கடைக்கு பட்டாசு பண்டல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அப்போது உராய்வு காரணமாக தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடையில் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அந்த நேரம் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடி விபத்து தொடர்பாக சிவகாசி கிழக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours