நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை !

Spread the love

நடிகர் விஜய் ஆண்டனியின் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் மீரா, மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவேரி மருத்துவமனையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இறந்த சிறுமி நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் ஆவார். அவர், சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்ததாகவும், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது . நேற்று இரவு வழக்கம் போல் அவர் உறங்கச் சென்றுள்ளார்.

விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை விஜய் ஆண்டனி படுக்கை அறைக்கு சென்று பார்க்கையில் துப்பட்டாவால் பேன் ஊக்கில் சிறுமி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் பணியாளர் உதவியுடன் மகளை கீழே இறக்கி காரில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக கூறியதின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு போலீசார் விரைந்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours