அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு இவ்வளவா ?!

Spread the love

ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு 648 கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்திருப்பது மலைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களின் சொத்துவிவரப் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் அதிமுக வேட்பாளருக்கு 648 கோடி ரூபாய் சொத்துஇருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் களம் காண்கிறார். திங்கட்கிழமை அவர் தனது வேட்பு மனுவை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம்தாக்க செய்தார். அப்போது வேட்புமனுவுடன் தனது சொத்து பட்டியலை இணைத்து இருந்தார்

அசோக்குமாரின் வங்கி கணக்குகளில் 6 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாயும், மனைவியின் வங்கி கணக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரமும் இருப்பு உள்ளது. அசோக்குமார் தனது கையிருப்பில் ரூ.10 லட்சமும், மனைவியின் கையிருப்பில் ரூ.5 லட்சமும் உள்ளது. அசோக்குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது. இருவருடைய பெயரிலும் வாகனம் இல்லை. 2 பேரின் பெயரிலும் வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

பட்டியல்படி, அசோக்குமாருக்கு ரூ.526 கோடியே 53 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.56 கோடியே 95 லட்சம் அசையா சொத்தும் உள்ளன. மொத்தம் ரூ.583 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான சொத்து உள்ளது.

இதேபோல் அவரது மனைவிக்கு ரூ.47 கோடியே 38 லட்சத்து 78 ஆயிரம் அசையும் சொத்தும், ரூ.22 கோடியே 60 லட்சம் அசையா சொத்தும் உள்ளன. ஆற்றல் அசோக்குமார் தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் ரூ.648 கோடி சொத்துகள் இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் தனக்கும், மனைவியின் பெயரிலும் சேர்த்து 648 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பது அனைவரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours