அண்ணா, கலைஞர் இல்லாத சமயத்தில் எனது கொள்கை வழிகாட்டி ஆசிரியர் கீ.வீரமணி.!

Spread the love

இந்த வருடம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கலைஞர் நூற்றாண்டு விழாவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று தஞ்சாவூரில் மாநகராட்சி அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.

இன்றைய கலைஞர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் வந்திருந்தார். தற்போது தஞ்சை மாநகராட்சி அரங்கில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பங்கேற்ற பேசி வருகிறார்.

அவர் பேசுகையில்,இது தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தாய்வீடு. தலைவர் கருணாநிதிக்கு மட்டுமல்ல எனக்கும் திராவிடர் கழகம் தான் தாய் வீடு. நானும் எனது வீட்டிற்கும் செல்வதாக தான் கூறிவிட்டு வந்தேன். ஐயா கீ.வீரமணி அழைத்தால் எப்போதும் போவேன். எங்கும் போவேன். ஏனென்றால் மிசா காலத்தில் இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர் கி.வீரமணி. பெரியார், அறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பிறகு வீரமணி தான் எனக்கு கொள்கை வழிகாட்டியாக உள்ளார். இதனை என்றும் சொல்வேன்.

திகவும் திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி என்றார் அறிஞர் அண்னா கூறினார். திமுக , திமுகவும் இருபக்க நாணயம் என்று கலைஞர் கூறுவார். என்னை பொறுத்தவரை உணவும் உயிரும் போன்றது. கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்த உரிமை திகவுக்கு உண்டு.

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு முதலமைச்சர் பதவியை கருணாநிதி ஏற்க மறுத்தார். ஆனால் பெரியார் கூறியதன் பெயரில் தான் முதல்வர் பொறுப்பை தலைவர் கருணாநிதி ஏற்றார். அதற்கு பெரியார் கூறியதன் பெயரில் தூது வந்தவர் ஆசிரியர் கீ.வீரமணி.

பிரதமரையும், குடியரசு தலைவரையும் உருவாக்கியவர், ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. ஆனால் அவர் இறுதி வரை மானமிகு சுயமரியாதைகாரராகவே தனது 95 ஆண்டுகள் வாழ்ந்தார். பெரியார் எங்களை திட்டி திட்டி வளர்த்தார். எங்கள் அண்ணன் அழகிரி திருமணத்தின் போது நான் தான் பெரியாருக்கு உணவு பரிமாறினேன் என திராவிடர் கழகத்திற்கும் தனக்குமான நினைவுகள் பற்றி பகிர்ந்து கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours