ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடை தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜ் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று ஆசிய விளையாட்டு2023 போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் கான்டினென்டல் மல்டிஸ்போர்ட் நிகழ்வின் 19 வது போட்டிகள், செப்டம்பர் 23 அன்று தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், இந்தியா சார்பில், 655 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.
அந்த வகையில் 400 மீட்டர் தடை ஓட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் தடை தாண்டுதல் இறுதிச்சுற்றில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி 400 மீட்டர் தடை தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றதற்க்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ..
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை சகோதரி வித்யா ராமராஜ் அவர்களுக்கு,
தமிழ் நாடு பாஜக சார்பாக மனம் நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரி வித்யா ராமராஜ் அவர்கள், பாரதத்தின் தங்க மங்கை, திருமதி பி.டி.உஷா அவர்களின் 39 ஆண்டு கால தேசியச் சாதனையை சமன்செய்து, இறுதிப் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றிருக்கிறார் என்பது மிகவும் சிறப்பு.
சகோதரி வித்யா ராமராஜ் அவர்கள், மென்மேலும் பல சாதனைகள் படைத்து, தேசத்தைப் பெருமைப்படுத்த மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours