சென்னை 384 : ஜாதி மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும் – அண்ணாமலை ட்வீட்

Spread the love

தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரின் 384 வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . அந்தவகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரை அமைப்பதற்காக இடம் வாங்கப்பட்ட தினமான, ஆகஸ்ட் மாதம் 22ஆம் நாளான இன்று, #MadrasDay எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சென்னை மாநகரம், ஜாதி மதம் பாராது வந்தோரை எல்லாம் வாழவைக்கும். உழைக்கத் தயங்காதவர்களுக்கு, இங்கே உயர்வடையத் தடையில்லை. சென்னையில் பிறந்த பல சாதனையாளர்கள் உலகம் முழுவதும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

1639 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த 384 ஆண்டுகளில், இந்திய அளவிலும், உலக அளவிலும் முக்கியமான நகரமாக உருவாகியிருக்கும் நமது சென்னை, இன்னும் பலப்பல நூற்றாண்டுகள் சீரும் சிறப்புமாக இருக்கவும், மேலும் பல சாதனையாளர்களை உருவாக்கவும் தமிழ்நாடு பாஜக சார்பாக, அனைவருக்கும் இனிய #MadrasDay வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது வாழ்த்து செய்தியில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார் .


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours