சென்னப்ப நாயக்கர் தினம் !

Spread the love

சென்னை உருவாக காரணமாக இருந்தவர்கள் 17ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் கோட்டத்தை ஆட்சி செய்த வன்னிய குல சத்ரியர்களான சென்னப்ப நாயக்கர் மகன்களாவர். தாமல் கோட்டத்தை ஆட்சி செய்து வந்த வேங்கடப்ப நாயக்கர் மற்றும் அவரது சகோதரா் பூந்தமல்லியை ஆட்சி செய்து வந்த ஐயப்ப நாயக்கர் ஆவார்கள்.

தாமலைச் சேர்ந்த சென்னப்ப நாயகர் மகன்கள் வெங்கடப்ப நாயகர் மற்றும் அவரது தம்பி பூந்தமல்லி அய்யப்ப நாயகர் இணைந்து தங்களுடைய ஆளுமையின் கீழ் இருந்த மதராசன் பட்டினத்தை ஆங்கிலேயர்களுக்கு வணிகம் செய்வதற்காகவும், குடியிருப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் கொடுத்து 1639 ஆகஸ்ட் 22ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஆகஸ்ட் 22 ஆம் நாள் தான் சென்னை தினம் என கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆங்கிலேயர்களால் ஏற்படுத்த பட்ட அந்த நகருக்கு தனது தந்தையின் பெயரான சென்னப்ப நாயகர் பெயரை சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கினங்க ஆங்கிலேயர்களால் இந்த மாநகருக்கு சென்னப்ப நாயகர் பட்டணம் என பெயர் வைக்கப்பட்டது.

அதுதான் தற்போது சென்னை பட்டணம், என்று அழைக்கப்படுவதாக ஹிந்து விகாஸ் மோர்சாவின் நிறுவன தலைவர் ஜி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours