ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனம்.. போக்குவரத்து துறை ஊழியர்கள் ஷாக் !

Spread the love

திருநெல்வேலி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக திருநெல்வேலி மண்டலத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகளுக்கு ஓட்டுநர், நடத்துநர்களை தனியார் மனித வள நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி, போக்குவரத்துக்கழக மண்டல மேலாண் இயக்குநர் மூலம் கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை ஆன்லைன் மூலம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் நேற்று முதல் துவங்கி உள்ளது.

இதன்படி வரும் ஜூலை 18ம் தேதி வரை இந்த ஒப்பந்தப்புள்ளி திறந்திருக்கும் எனவும், அன்றைய தினமே ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு அறிவிப்புகளை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மண்டலத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக பாேக்குவரத்துத் துறை ஊழியர்கள் சம்மேளனம் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

நிரந்தர பணி அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்ப போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுவது அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிப்பதாக போக்குவரத்துத் துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஒப்பந்தப்புள்ளி மூலம் கடந்த 6 மாதங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் 240 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அரசுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours