சென்னை – பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட அவரது உடல், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் புடைசூழ சென்னை – பெரம்பூர் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
சற்று முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பந்தர் கார்டன் பள்ளிக்கு எடுத்துவரப்பட்டது; இறுதி அஞ்சலி செலுத்த சென்னைக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று வர இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி அவரது உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டிருந்தார். அது மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் சென்றார். இன்று காலை அவசர வழக்காய் விசாரித்து வரும் தீர்ப்பின் அடிப்படையில் அடக்கம் செய்யப்படும் இடம் தீர்மானிக்கப்படும் என்று தெரிகிறது.
+ There are no comments
Add yours