எதிர்வரும் தேர்தல் முடிவுக்கு பின்னரே தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்ததா வளரவில்லையா என்பது தெரியவரும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
வந்தாரை வாழ வைக்கும் சிங்காரச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது :
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை பத்து வருடம் காவல்துறையில் இருந்ததாக கூறுகிறார். அந்த 10 வருடத்தில் ஒரு முறையாவது துப்பாக்கியை எடுத்து டிரிகர் அழுத்தி இருப்பாரா அண்ணாமலை.
அண்ணாமலைக்கு எனது பையன் வயது கூட கிடையாது. எனவே அவர் பின்னாடி நோட்டீஸ் கொடுத்து ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதிமுக- பாஜக கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டால் பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்கமாட்டார் . அண்ணாமலையின் வாய்ச்சவடால் பாஜகவுக்கு தான் பெரும் பின்னடைவை தரும்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தற்போது செய்துகொண்டிருக்கும் செயல்கள் அனைத்துமே சுயநலத்துக்காகதான். தனது பெயரையும், புகழையும் வளர்த்துக்கொள்வதற்காகவெ இப்படி செய்துகொண்டிருக்கிறார்
எதிர்வரும் தேர்தல் முடிவுக்கு பின்னரே தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்ததா வளரவில்லையா என்பது தெரியவரும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours