பெண்களின் பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்க மதுரையில் விழிப்புணர்வு நடைப்பயணம்

Spread the love

மதுரை: மதுரையில் பெண்களுக்கான விடுதலை வாக்கத்தான் நடைபெற்றது.

இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, நமது பாரம்பரிய ஆடையான சேலையினை பெண்கள் அனைவரும் உடுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் ‘விடுதலை வாக்கத்தான்’ விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று (ஆக.11) நடைப்பெற்றது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளார் இளங்குமரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை முல்லை பெரியாறு கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மார்நாடு கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து பெண்களுக்கான சேலை வாக்கத்தான், சிறுவர்களுக்கான மெல்லோட்டம் உள்ளிட்டவை நடைப்பெற்றன. ஒத்தக்கடையில் துவங்கி நரசிங்கம் கோயில் வரை‌ சென்று திரும்பினர்.

இதனைத் தொடர்ந்து வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வாக்கத்தானில் 6 வயது சிறுவர்கள் முதல் 60வயது முதியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours