சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சி தமிழக பொதுச்செயலாளர் கே.ஜெய்சங்கர் எழுதிய கடிதம்: ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட், பிபிஜி சங்கர் ஆகியோரது கொலை தொடர்பான வழக்குகள், செல்வப்பெருந்தகை மீது உள்ளன.ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்துறைகளை கட்டுப்படுத்தும் ஒருவன்முறை கும்பலின் தலைவர்தான் வேலூர் சிறையில் இருக்கும் நாகேந்திரன். அவருடைய மகன், இளைஞர் காங்கிரஸில் பொதுச்செயலாளராக இருந்த அஸ்வத்தாமன்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இளைஞர் காங்கிரஸில் நியமித்தது செல்வப்பெருந்தகைதான். ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகை ஏன் கைது செய்யப்படவில்லை என்ப மக்கள் கேட்கின்றனர். காங்கிரஸ் மாநில தலைவராக இருப்பதால் அவரை கைது செய்ய அரசும், காவல்துறையும் தயங்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே,மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours