ராமர் படத்தை கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக !

Spread the love

கோவை பந்தய சாலை பகுதியில் ராமர் படத்தை கொடுத்து மத ரீதியில் வாக்கு சேகரித்த பா.ஜ.க.,வினரை தடுத்து நிறுத்துமாறு வழக்கறிஞர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை கோவை பந்தயசாலை காஸ்மோபோலிடன் கிளப் அருகில் பா.ஜ.க.,வினரால் நடைபயிற்சி செல்பவர்களுக்கு தாமரை சின்னத்துடன் கூடிய ராமர் படம் வழங்கப்பட்டது.

தாமரை சின்னம் பதித்த ராமர் படத்தை பொதுமக்களுக்கு கொடுத்து பா.ஜ.கவினர் வாக்குசேகரித்த நிலையில், அங்கு வந்த வழக்கறிஞர் லோகநாதன் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரிடம் தேர்தல் பிரச்சாரத்தில் மத துஷ்பிரயோகம் செய்யக்கூடாது, கடவுள்களை முன்நிறுத்தகூடாது என்ற விதிமுறை இருக்கும் போது, அனைத்து சமுதாய மக்களும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பந்தய சாலை பகுதியில் ராமர் படத்தை விநியோகித்து வருகின்றனர் என புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாஜகவினரிடம் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமர் படங்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கறிஞர் லோகநாதனிடம் புகார் பெற்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours