நடிகர் மாரிமுத்துவின் உடல்… பெருங்குரலெடுத்து கதறியழுத தாய்!

Spread the love

நடிகர் மாரிமுத்துவின் இறுதி ஊர்வலம் இன்று அவரது சொந்த ஊரான மதுரை, பசுமலைத்தேரியில் நடந்து வருகிறது.

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து நேற்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். இதனை அடுத்து நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மாலை வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், நேற்று மாலை அவரது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டது. தற்போது இறுதிச் சடங்கு நடந்து வருகிறது.

மொத்த பசுமலைத்தேரி கிராமமும் திரண்டிருந்து, கண்ணீரில் கரைந்தது. ரசிகர்கள், ஊர்மக்கள், உறவினர்கள் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வர மாரிமுத்துவின் உடலைப் பார்த்து அவரது தாயார் தலையில் அடித்துக் கொண்டு பெருங்குரலெடுத்து கதறி அழுதது காண்போரை உலுக்கியெடுத்தது.

மகன் எப்போது வருவான் என நேற்று மாலையில் இருந்து உறவினர்களிடம் விசாரித்து வந்தவர், அவரது உடலைப் பார்த்ததும் கட்டியணைத்து முத்தமிட்டு கதறி அழுத காட்சி காண்பவரையும் கலங்கடித்துள்ளது. அவரது மரணம் குறித்து உறவினர்கள், “மாரிமுத்து இப்போது தான் சினிமாவில் பேரும் புகழோடும் இருந்தார். ஒவ்வொரு மாதமும் முடிந்தளவு எங்களைப் பார்க்க வந்து விடுவார்.

ஆரம்ப காலத்தில் சினிமாவில் ரொம்பவும் கஷ்டப்பட்டார். நன்றாக அறிவோடு படிக்கக்கூடியவர். பெயருக்கு ஏற்றாற் போலவே அவரது கையெழுத்தும் முத்து முத்தாக இருக்கும். அவரது இழப்பு எங்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாக உள்ளது” எனக் கூறியழுதனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours