தாய்ப்பால் விற்பனை விவகாரம் – புகாரளிக்க வாட்சப் எண் அறிவிப்பு

Spread the love

சென்னையில் தாய்ப்பால் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாதவரம் தபால்பெட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா. இவர் மாதவரம் கே.கே.ஆர். கார்டன் தெருவில் மருந்து கடை நடத்தி வந்த இவர் தன்னுடைய கடையில் 30 மில்லி லிட்டர் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவ்ல் அறிந்த திருவள்ளூர் உணவு பாதுகாப்புத்துறையின் நியனம அதிகாரி எம்.ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இவரது கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது, 100 மில்லி பாட்டில்களில் பதப்படுத்திய தாய்ப்பாலை அடைத்து அவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மருந்து கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அத்துடன் புரதச்சத்து பவுடர் விற்பதற்காக வழங்கப்பட்ட உரிமத்தை வைத்து தாய்ப்பால் விற்பனை செய்து வந்ததும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தாய்ப்பால் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால், வேறு பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி தாய்ப்பால் விற்பனை செய்பவர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் தாய்ப்பால் விற்பனையைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தாய்ப்பால் விற்பனை குறித்து 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார்களை வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தியாகவோ அனுப்பலாம். இந்த புகாரின் பேரில் தீவிர ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours