சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க முடியாதா? – சீமான் கேள்வி

Spread the love

சென்னை: நீர், நிலம், காற்று எல்லாம் நஞ்சாகி விட்ட பிறகு, விளக்கை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டத்துக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய சீமான், ”அனல், புனல், அணு, நிலக்கரி இப்படி எல்லா மின் உற்பத்தி திட்டங்களும், நாட்டின் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்று சொல்லித் தான் கொண்டு வரப்பட்டது. இந்த வார்த்தைகளை கேட்கும் போது இனிப்பாகத்தான் இருக்கும். மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்வது, நாடு எப்படி வளர்ச்சி பெறும்? என்பது எல்லாம் சரி தான்.

அனல் மின்சாரத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளை, வாழ்வாதார இழப்பை, மனச்சான்றோடு பேசுகிறவர்கள், வாருங்கள். நேரில் சென்று அங்கே சாம்பல் படிந்த பகுதிகளை பார்ப்போம். அதில் எவ்வளவு கேடுகள் விளைகிறது என பார்ப்போம். நீர், நிலம், காற்று எல்லாம் நஞ்சாகி விட்ட பிறகு, விளக்கை வைத்துக் கொண்டு, பிணத்தை வைத்து அழலாம். தாயை கொன்று விட்டு, என்ன வளர்ச்சியை காணப்போகிறீர்கள். வேலை வாய்ப்பு, வளர்ச்சி என்ற வார்த்தைகளை சொல்லியே பல தொழிற்சாலைகள் இப்படித் தான் கொண்டு வரப்பட்டது. 100 பேரில் 90 பேர் புற்று நோயால் மரணம். 3 வயது குழந்தைக்கு புற்றுநோய் வரக் காரணம் என்ன? தாய்ப் பால் நஞ்சானதால், அதனை குடித்த குழந்தைக்கு புற்று நோய்.

மின்சாரத் தேவையை நிறைவு செய்வதற்கு நிலக்கரி, அணு உலை, அனல் மின் நிலைய உற்பத்தி தான் இருக்கிறது என்றால், அதைப்பற்றி யோசிக்கலாம். உலகில் பாதுகாப்பான அணு கிடையாது என்றே விஞ்ஞானிகளே சொல்கிறார்கள். அணு குண்டு மீது உட்காருவதும், அணு உலையின் அருகே இருப்பது ஒன்று தான் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஜப்பான், ஆஸ்திரேலியா, அரபு நாடுகளில் கடல் அலைகளில் மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க முடியாதா? காற்றாலை, கடல் அலை, சூரிய ஒளி ஆகியவை தீராத வளம். நிலக்கரி தீர்ந்து விடும் வளம். இந்த அனல் மின் நிலையத்தை வேண்டும் என்று சொல்பவர்கள், உங்களின் வீட்டை, அனல் மின் நிலையத்துக்கு அருகில் கட்டிக் கொள்ளுங்கள். எங்களுக்கு நீங்கள் வசிக்கும் இருப்பிடத்தை கொடுத்து விடுங்கள்” என்று சீமான் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours