ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிரான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு !

Spread the love

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்றியது தமிழக அரசு. இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து, விளையாட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆன்லைன் நிறுவனங்கள் ஏற்கனவே வாதம் வைத்திருந்தது.

திறமைக்கான விளையாட்டான ரம்மி அதிர்ஷ்ட விளையாட்டாக கருத முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தற்கொலைகள் உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்தே தடை சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours