போக்குவரத்து நெரிசல் இல்லாத சென்னை வேண்டுமானால், நிலவில் தான் சென்னையை வைக்க வேண்டும் என கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தை இடமாற்றம் செய்ய இருப்பதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தகவல் தெரிவித்திருந்தது. இதனை கண்டித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்து கோயம்பேட்டில் உள்ள வியாபாரிகளிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், 25 வருடமாக இயங்கி வரும் கோயம்பேடு வணிக வளாகத்தில் 5000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கடைகளும், 15000க்கும் மேற்பட்ட வணிகர்கள், உட்பட லட்சக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரம் இங்கு உள்ளது எனவும் போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் போக்குவரத்து நெரிசல் இல்லாத சென்னை வேண்டுமானால் நிலவில் தான் சென்னையை வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சிறு வணிகர்கள் அழிக்கப்பட்டு லூலு மார்க்கெட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு சாதகமாக இயங்கி வருகிறது என தெரிவித்த அவர், பல குடும்பங்களின் வாழ்வாதாரம் கோயம்பேடு மார்க்கெட்டை நம்பி உள்ள நிலையில் முதலமைச்சர் இன்னும் வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட் அரசாங்கத்திற்கு சொந்தமானது அல்ல என தெரிவித்த அவர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிர்வகிக்கப்படுவதாகவும் அனைத்து வணிகர்களிடமும் பணம் வசூலிக்கப்பட்டு தான் மார்க்கெட் கட்டப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours