கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய பணிகளை ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டம் – சென்னை ரயில்வே கோட்டம்!

Spread the love

கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்ட வர சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 2,310 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, இந்த பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் – செங்கல்பட்டு வழித் தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – செங்கல்பட்டு வழித் தடத்தில் பேருந்து நிலையத்துக்கு எதிரே ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வேயிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, ரூ. 20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படு வதற்கு தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் கடந்த அக்டோபரில் ஒப்பந்தப் புள்ளி கோரியது.

அதில் புதிய ரயில் நிலையம், நடைமேடைகள் தொடர்பாக நிரந்தர பணிகளை மேற்கொள்வது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் புதிய ரயில் நிலையத்தை 8 மாதங்களுக்குள் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ரூ.20 கோடி மதிப்பில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடை பெறுகிறது. இந்த ரயில் நிலையம் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், மூன்று நடைமேடைகளுடன் அமைய உள்ளது.

மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடைமேம் பாலம், ரயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours