பபாசி அமைப்பு சார்பில் புத்தகக் கண்காட்சி வருகிற ஜனவரி மாதம் 5ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. வழக்கமாக புத்தகக் கண்காட்சியுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, இந்த ஆண்டு தனித்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொழிபெயர்ப்புக்கான மானியமாக மூன்று கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கெஸ்ட் ஆப் ஹானர் நாடாக மலேசியா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் தனியே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கமாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பவாசி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சி வழக்கம்போல் இந்த ஆண்டும் வருகிற ஜனவரி மாதம் 5ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இந்த கண்காட்சி வழக்கம்போல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours