சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

Spread the love

சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கி.மீ, 32.186 கி.மீ, 21.097 கி.மீ மற்றும் 10 கி.மீ) ‘சென்னைமாரத்தான்’ என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் நாளை (06.01.2024) காலை 04.00 மணி முதல் நடைபெறுகிறது

இந்த மாரத்தான் ஓட்டம் சென்னை நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்துஆரம்பிக்கப்பட்டு காமராஜர் சாலைசாந்தோம் ஹை ரோடுடாக்டர் டி.ஜி.எஸ்தினகரன் சாலைசர்தார் படேல்சாலை.எம்.ஆர்., கே.கேசாலை.சி.ஆர் வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தைச் சென்றடையும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டுசென்னையில் போக்குவரத்து மாற்றம்செய்யப்பட்டுள்ளதுஇது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்

அடையார் மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.பாலம்டாக்டர் டி.ஜி.எஸ்தினகரன்சாலைசாந்தோம் ஹை ரோடுகாமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவிதமாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

போர் நினைவிடத்திலிருந்து திரு.வி.பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாதுமேலும் வாகனங்கள்கொடி மரச் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு – வாலாஜா பாயின்ட் அண்ணா சாலை வழியாகத் தங்களதுஇலக்கை சென்றடையலாம்ஆர்.கேசாலையிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெருசந்திப்பில் திருப்பி விடப்படும்அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடுலஸ் கார்னர்ஆர்.கேமடம் சாலைவழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

மத்திய கைலாஷிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாதுஅவ்வாகனங்கள் எல்.பி. (LB) சாலைசாஸ்திரி நகர்திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கைசென்றடையலாம்காந்தி மண்டபத்திலிருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்படமாட்டாதுஅவ்வாகனங்கள் எல்.பிசாலைசாஸ்திரி நகர்திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கைசென்றடையலாம்.

பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல்எம்.ஜிசாலையை நோக்கி திருப்பி விடப்படும்மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்குஅனுமதிக்கப்படும்பெசன்ட் அவென்யூஎம்.எல் (ML) பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாதுஎனவேபொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறைக்கு ஒத்துழைப்பைவழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours