இன்று சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேசிய அளவில் கட்சிகள், கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று பாஜக சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி பகல் 1.15 மணிக்கு மகாராஷ்ராவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, சென்னைக்கு மதியம் 2.45 மணிக்கு வருகிறார்.
இதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, கல்பாக்கம் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று மதியம் 3.30 முதல் மாலை 4.15 மணி வரை கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு (உற்பத்தி) திட்டத்தை பார்வையிடுகிறார்.
அதனைத்தொடர்ந்து மீண்டும் கல்பாக்கம் ஹெலிபேடு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலைய ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நந்தனம் பொதுக்கூட்டத் திடலுக்கு மாலை 5.10 மணிக்கு வருகிறார்.
இதன் பின் மாலை 6.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, மாலை 6.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக விமான நிலையம் செல்கிறார். மாலை 6.35 மணிக்கு சென்னையில் இருந்து தெலங்கானா நோக்கி விமானத்தில் அவர் புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 15,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours