பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தார். அங்கு, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை தமிழக அரசு சார்பில் அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளும் பிரதமரை வரவேற்றனர். நடப்பு 2024-ஆம் ஆண்டு தொடங்கி நான்காவது முறையாக பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார். ஆண்டு தொடக்கத்தில் திருச்சியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா, சர்வதேச விமான நிலையம் திறப்பு நிகழ்ச்சி, அடுத்தடுத்த நிகழ்வுகளான ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, ராமேஸ்வரம் உள்ளிட்ட கோயில்களில் வழிபாடு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் வழிபாடு மற்றும் தற்போது சென்னை நந்தனத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது என நான்கு முறை தமிழகத்துக்கு மோடி வருகை தந்துள்ளதால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
ஆனால் பிரதமர் மோடியின் தொடர் வருகையை எதிர்கட்சியினர் விமர்சித்தும் வருகின்றனர். வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் வருவதை ஒட்டியே பிரதமர் அடிக்கடி தமிழகத்துக்கு வருகை தருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், கல்பாக்கத்துக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு, 500 மெகாவாட் வேக ஈனுலை மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர், இன்று மாலை சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
+ There are no comments
Add yours