மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன்காரணமாக சென்னை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் கடல் போல தேங்கி நின்றதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் வெள்ளப்பாதிப்பை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், இதுவரை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் சென்னையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையிலும் பணியை தொடரும், தங்களது உடல் நலத்தையோ, குடும்பத்தையோ பொருட்படுத்தாமல் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், புயல் பாதித்த இடங்களில் சிறந்த முறையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சியில் பணியாற்றிய 3,429 பேருக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளார்.
+ There are no comments
Add yours