நாளை பழவேற்காடு மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை!

Spread the love

பி எஸ் எல் வி சி 58 ஏவுகணை நாளை காலை விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்கள் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழவேற்காடு மீனவர்கள் இன்று மாலை முதல் நாளை வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை ஜனவரி 1-ம் தேதி காலை 9.10 மணி அளவில் பி.எஸ்.எல்.வி. சி-58 ஏவுகணை விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ஏவுகணையில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்வெளியில் உள்ள தூசுகள் மற்றும் கருந்துளை மேக கூட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறது

இந்த செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்கான இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் இன்று மாலை முதல் நாளை வரை முன்னெச்சரிக்கை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours