கூரியர் மூலம் புலித்தோல், போதை பொருட்கள் பார்சல் வந்து இருப்பதாக கூறி தொழிலதிபர்கள், பெண்களிடம் பணம் பறிக்கும் வெளிநாட்டு கும்பல்.
பிரபல கூரியர் நிறுவனங்கள் மூலம் புலித்தோல், போதை பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் பார்சல் வந்து இருப்பதாக தொழிலதிபர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் வெளிநாட்டு மோசடி கும்பலிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வசதியான நபர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து மோசடி நபர்கள் சிலர், செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் பெயரில் பார்சல் வந்துள்ளது.அந்த பார்சலில் போதை பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பணம் இருப்பதாகவும், இதனால் உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மிரட்டி பல லட்சம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி மோசடி செய்யும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளது
+ There are no comments
Add yours