திருச்சி: பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரி சங்கர்,அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் கேட்டு திருச்சி 3-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா, அடுத்த 6 மாதங்களுக்கு 1 மற்றும் 15-ம் தேதிகளில் திருச்சி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
எனினும், கோவை காவல் நிலையத்திலும் அவர் மீது வழக்கு இருப்பதால், ஃபெலிக்ஸ் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்படுவார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours